search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மன்னிப்பு கேட்காததால் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- அமைச்சர் ரோஜா
    X

    மன்னிப்பு கேட்காததால் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- அமைச்சர் ரோஜா

    • டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
    • பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.

    பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×