search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரபலங்கள் தான் பொறுப்பு.. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது- ரேவந்த் ரெட்டி
    X

    பிரபலங்கள் தான் பொறுப்பு.. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது- ரேவந்த் ரெட்டி

    • தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.
    • பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.

    இந்த குழுவில் நடிகர்கள் வெங்கடேஷ், நிதின், வருண் தேஜ், சிவ பாலாஜி, இயக்குனர்கள் திரி விக்ரம், ஹரிஷ் சங்கர், அணில், பாபி, வம்சி, தயாரிப்பாளர்கள், அல்லு அரவிந்த், டக்குபதி சுரேஷ், சுனில், சுப்ரியா, நாகவம்சி உள்ளிட்டோர் இருந்தனர்.

    இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. சினிமா டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகள், சினிமா பட கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் பணி பாதுகாப்பு, சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைதொடர்ந்து, தெலுங்கு திரைத்துறையினரிடம் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, " சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்றார்.

    Next Story
    ×