search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேவந்த் ரெட்டிக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
    X

    ரேவந்த் ரெட்டிக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

    • இரு மாநிலங்களுக்கும் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
    • பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாக தீர்க்க வேண்டியது அவசியம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இரு மாநிலங்களுக்கும் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

    இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்திரபாபு நாயுடு தெலுங்கானா காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவேந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாக தீர்க்க வேண்டியது அவசியம்.

    வருகிற 6-ந் தேதி பிற்பகல் சந்தித்து பேச விரும்புகிறேன். இந்த சந்திப்பு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என நான் நம்புகிறேன்.

    மேலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு பரஸ்பர நன்மைகளையும் பயக்கும் தீர்வுகளை அடைய நாம் இருவரும் சேர்ந்து திறம்பட ஒத்துழைக்க முடியும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கானா முதல்-மந்திரி ரேவேந்த் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அவர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்தார்.

    மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு ரேவந்த் ரெட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்காக நற்பெயரையும் பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் டெல்லிக்கு சென்ற போது ஜேபி நட்டா பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்தார்.

    பிரதமர் மோடியை தனது மூத்த சகோதரர் என அழைத்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரிடமும் நட்புறவை வளர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார்.

    எனவே சந்திரபாபு நாயுடு அழைப்பிற்கு ரேவந்த் ரெட்டி சம்மதம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் முதல்-மந்திரியை சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×