search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கர்நாடகா இடைத்தேர்தல்: NDA வேட்பாளராக ஹெச்.டி. குமாரசாமியின் மகன் போட்டி
    X

    கர்நாடகா இடைத்தேர்தல்: NDA வேட்பாளராக ஹெச்.டி. குமாரசாமியின் மகன் போட்டி

    • ஹெச்.டி. குமாரசாமி மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
    • அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் சன்னபட்னா தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அவர் தற்போது மக்களவை எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு மந்திரியாக உள்ளார்.

    இதனால் சன்னபட்டனா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக, சன்னபட்னா காங்கிரஸ் வேட்பாளராக பா.ஜ.க.-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த யோகேஷ்வரா நிறுத்தப்பட்டுள்ளார்.

    தற்போது இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.


    Next Story
    ×