search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணாச்சல பிரதேச பெயரை சீனா மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது - ஜெய்சங்கர் விளக்கம்
    X

    அருணாச்சல பிரதேச பெயரை சீனா மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது - ஜெய்சங்கர் விளக்கம்

    • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது
    • தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

    11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது. தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.

    தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம்தான். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை சீனா மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது என்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×