search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தே பாரத் ரெயில் உணவில் கிடந்த கரப்பான்பூச்சி
    X

    வந்தே பாரத் ரெயில் உணவில் கிடந்த கரப்பான்பூச்சி

    • உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
    • விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்.

    நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் விரைவாக செல்ல வசதியாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில ரெயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த ஒரு தம்பதிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக விதித் வர்ஷ்னி என்ற பயணி தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்துள்ள பதிவில், `கடந்த 18-ந் தேதி எனது மாமாவும், அத்தையும் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.

    தயவு செய்து விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ரெயில்வே அதிகாரிகளை டேக் செய்திருந்தார்.

    அவரது இந்த பதிவு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட சேவை அளித்தவருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டது என கூறி உள்ளனர்.

    Next Story
    ×