search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கமல்நாத்,  அசோக் கெலாட் மகன்களுக்கு வாய்ப்பு
    X

    காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கமல்நாத், அசோக் கெலாட் மகன்களுக்கு வாய்ப்பு

    • ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்
    • காங்கிரஸ் கட்சி தற்போது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இதனை அடுத்து, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது தனது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

    மத்தியபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் போட்டியிடுகிறார்.

    ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பியான ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

    Next Story
    ×