என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரசியல் ரீதியாக எங்களுடைய குடும்பத்தை பலவீனப்படுத்த சதி: பிரஜ்வால் ரேவண்ணாவின் சகோதரர்
- பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது.
- கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது. தற்போது பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக எங்களுடைய குடும்பத்தை பலவீனப்படுத்துவதற்காக சதி நடப்பதாக பிரஜ்வால் ரேவண்ணாவின் சகோதரரும், கர்காடகா மாநில மேலவை எம்.எல்.ஏ.-வும் (எம்எல்சி) ஆன சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுராஜ் ரேவண்ணா கூறுகையில் "பிரஜ்வால் ரேவண்ணா (சகோதரர்) ஈடுபட்டதாக கூறப்படும் பாலியல் மோசடி வழக்கு விசாரணைக்காக சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எது நிரூபிக்கப்பட வேண்டுமோ, விசாரணையில் அது நிரூபிக்கப்படும். நான் எப்படி அதற்கு பதில் சொல்ல முடியும்?. பிரஜ்வால் ரேவண்ணா குறித்த தகவல் ஏதும் என்னிடம் இல்லை.
எனது தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரம் வழக்குகள் தொடரப்படலாம். என்ன நிரூபிக்கப்பட வேண்டுமோ, அது இறுதியில் நிரூபிக்கப்படும். ரேவண்ணாவை பற்றி எங்களுடைய தாலுகா மற்றும் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். நான் ஏதும் கூற விரும்பவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். ஹசன் அரசியலை நீங்கள் எடுத்துக் கொண்டால், ரேவண்ணாவிற்கு போட்டியாக யாரும் இல்லை. அரசியலில் அவரை போன்று யாரும் இல்லை. அவரை பலவீனப்படுத்த, இந்த சதிகள் அனைத்தும் தீட்டப்படுகின்றன.
நேற்று கூட தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரஜ்வால் ரேவண்ணா வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி. யாரும் யாரையும் குற்றம் சாட்டலாம். சிறப்பு விசாரணைக் குழு முடிவில் என்ன வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்