என் மலர்
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு- கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தி.மு.க. குழு சந்திப்பு

- கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை சந்தித்த தமிழக குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது.