search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா நிதியில் கோடிக் கணக்கில்  ஊழல்.. கர்நாடக பாஜக மீது எழுந்த குற்றச்சாட்டு - அறிக்கை தாக்கல்
    X

    'கொரோனா நிதியில் கோடிக் கணக்கில் ஊழல்..' கர்நாடக பாஜக மீது எழுந்த குற்றச்சாட்டு - அறிக்கை தாக்கல்

    • கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரசை சேர்ந்த முதலவர் சித்தராமையா சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலகோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்றும், பல கோப்புகள் காணாமல் போயுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ரூ.1000 கோடி வரை கொரோனா நிவாரண நிதியில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கிடையே இந்த அறிக்கை தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் வரை இன்னும் 6 மாதங்களுக்குக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×