என் மலர்
இந்தியா
X
கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்
ByMaalaimalar12 Aug 2023 9:46 AM IST (Updated: 12 Aug 2023 3:01 PM IST)
- ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.
- ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.
கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 833 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் அடங்கும். மேலும் 8 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 944 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X