என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஊருக்குள் உலா.. வாகனங்களுக்கு மத்தியில் வாக்கிங் சென்ற முதலை - வீடியோ வைரல்
- சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கனமழை தொடர்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.
கனமழையை தொடர்ந்து, சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் முதலை வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். கனமழைக்கிடையில் முதலை ஒன்று சாலையில் சகஜமாக வருவதை பார்த்த நபர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் படம்பிடித்த வீடியோவில், சிப்லுன் சாலையில் பெரிய முதலை ஊர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்று இருந்தது. கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மூன்று முதலை இனங்களில் ஒன்றான குவளை முதலைகளுக்கு பெயர் பெற்றது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 2) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.