search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேல் ரத்னா விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்-  டி.குகேஷ் மகிழ்ச்சி
    X

    கேல் ரத்னா விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்- டி.குகேஷ் மகிழ்ச்சி

    • டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
    • இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.

    புதுடெல்லி:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், செஸ் வீரர் டி.குகேஷ், ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், மாற்று திறனாளி வீரர் பிரவீன்குமார் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

    இதுகுறித்து குகேஷ் கூறியதாவது:-

    இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×