என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் தினசரி பாதிப்பு உயர்வு- மேலும் 268 பேருக்கு கொரோனா
BySuresh K Jangir2 March 2023 11:48 AM IST (Updated: 2 March 2023 11:48 AM IST)
- பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.
- தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 169 ஆக இருந்தது. நேற்று 240 ஆக உயர்ந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 164 பேர் அடங்குவர்.
தொற்று மீட்பு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 104 அதிகமாகும். அதாவது தற்போது 2,439 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,772 ஆக நீடிக்கிறது.
Next Story
×