search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் செருப்புக்கு பூட்டுப்போட்டு சென்ற பக்தர்கள்
    X

    திருப்பதியில் செருப்புக்கு பூட்டுப்போட்டு சென்ற பக்தர்கள்

    • பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
    • விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

    திருமலை:

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

    எனவே, அந்த மையங்களில் செருப்புகள் மற்றும் ஷூக்களை பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப் படுகிறது.

    இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணி காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டுப் போட்டு சென்றனர்.

    இதை பார்த்த சிலர், 'இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகத்தால் செருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?' என கேள்வி எழுப்பினர்.

    Next Story
    ×