என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆக்கிரமிப்பின் போது சீனாவுடன் டிஸ்கோ ஆடிக் கொண்டிருந்தீர்களா?: பிரதமருக்கு ஒவைசி கேள்வி
- ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
- பாடலிபுத்ரா தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒவைசி பிரசாரம் செய்தார்.
பாட்னா:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உத்தர பிரதேசம், பீகார் உள்பட சில வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாடலிபுத்ரா பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார்.
அப்போது அசாதுதீன் ஒவைசி பேசுகையில், இதெல்லாம் ஒரு பிரதமர் பேசும் பேச்சுக்களா? எங்களுக்கு அதுபோல் பேசத் தெரியாதா? 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நமது நிலத்தை ஆக்கிரமித்தபோது மோடி அவர்களே சீனாவுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தீர்களா? என்று கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக பாடலிபுத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது, ஓட்டு ஜிகாத்துக்காக, முஸ்லிம்களை குளிர்விக்க, எதிர்க்கட்சிகள் 'முஜ்ரா' எனப்படும் பெண்களை ஆடவிட்டு மகிழ்வித்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.