என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்
- தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
- ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
இதனையொட்டி சர்வ பூ பால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். மூலவருக்கு அதிரசம் படையிலப்பட்டது.
நேற்று அவரவர்கள் வீட்டிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 74,807 பேர் தரிசனம் செய்தனர். 21, 974 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் இதமான தட்ப வெப்பநிலை உள்ளது.