search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரி விவகாரம்: கடவுள் அனுமதித்தால் பிரச்சினை முடியும் - டி.கே. சிவகுமார்
    X

    காவிரி விவகாரம்: கடவுள் அனுமதித்தால் பிரச்சினை முடியும் - டி.கே. சிவகுமார்

    • தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
    • நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது.

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "நாங்கள் கூடுவதை போல், தமிழ் நாடு கூடுவதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. அவர்களின் கூட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அது அவர்களின் உரிமை. அதுபற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், இதே நேரம் நேற்று முதல் எங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது."

    "காவிரியில் கிட்டத்தட்ட 50,000 அதிக கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கு இருப்பதை நாங்கள் ஹராங்கி வழியே வெளியேற்றி வருகிறோம். தற்போது வரை ஹராங்கி மற்றும் இதர பகுதிகளில் இருந்து 20,000-க்கும் அதிக கன அடி நீர் திறந்து விடப்படுவதாக நினைக்கிறேன். கடவுள் அனுமதித்தால் நம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்."

    "ஆனால், தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் விருப்பம், எங்கள் விருப்பம் மற்றும் நமது விருப்பங்களை தாண்டி நீங்கள் எங்களை அனுமதியுங்கள். நாங்கள் தேக்கி வைத்திருப்பதில் இருந்து மட்டும் தான் நீரை வழங்க முடியும். அந்த நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது. இது அவ்வளவு எளிமையானது."

    "கர்நாடக மக்களின் சார்பில் பணிவான கோரிக்கையை விடுக்கிறேன், எங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்குகிறோம்.., என்று தெரிவித்தார்.

    Next Story
    ×