என் மலர்
இந்தியா
X
பாராளுமன்றத்தில் அடுத்த ரிலீஸ் `ராமாயணா' - திரையிடல் எப்போ தெரியுமா?
ByMaalaimalar3 Feb 2025 9:50 AM IST
- ராமாயணம் இளவரசர் ராமரின் புராணக் கதை.
- பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் பிற பாராளுமன்ற உறுப்பினர்கள் காண உள்ளனர்.
'ராமாயணம் இளவரசர் ராமரின் புராணக் கதை' என்ற அனிமேஷன் படம் பாராளுமன்ற வளாகத்தில் வருகிற 15-ந்தேதி திரையிடப்பட உள்ளது.
இதுகுறித்து அப்படத்தின் விநியோக நிறுவனமான கீக் பிக்சர்ஸ் நிறுவன நிறுவனர் அர்ஜுன் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
1993-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜப்பானிய-இந்திய அனிமேஷன் படமான 'ராமாயணம்-இளவரசர் ராமரின் புராணக் கதை' படம் பாராளுமன்றத்தில் வருகிற 15-ந்தேதி சிறப்பு திரையிடல் செய்யப்பட உள்ளது. இதை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் பிற பாராளுமன்ற உறுப்பினர்கள் காண உள்ளனர்.
இது வெறும் திரையிடலாக மட்டுமல்லாமல், நமது உயர்ந்த பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
Next Story
×
X