search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் டிராகன் பழம் விளைச்சல் அதிகரிப்பு
    X

    ஆந்திராவில் டிராகன் பழம் விளைச்சல் அதிகரிப்பு

    • அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
    • ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன.

    திருப்பதி:

    டிராகன் பழம் ஒரு காலத்தில் கடைகளில் கிடைப்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. இப்போது, எளிதாக அங்காடிகளில் கிடைக்கிறது.

    பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன் பழம் தற்போது ஆந்திராவிலும் விளைச்சலை தொடங்கியுள்ளது.

    பாரம்பரிய பயிர்களை பயிரிடுவதில் குறைந்த அல்லது லாபம் இல்லாததால், ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் பல ஆர்வமுள்ள விவசாயிகள், அயல்நாட்டு டிராகன் பழத்தின் சாகுபடியை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அது நல்ல லாபம் ஈட்டி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, வெளிச்சந்தையில் ஒரு டன் பழத்தின் விலை ரூ.1.50 லட்சத்தை நெருங்குகிறது.

    அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர். இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இப்பகுதியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    டிராகன் பழத்தின் பூக்கள் மற்றும் பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரை மூன்று முதல் 5 முறை நிகழ்கின்றன, இது பருவமழையுடன் ஒத்துப்போகிறது, மேலும் பூக்கும் நிலைக்குப் பிறகு அறுவடை செய்ய கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது.

    "பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் பயிர் செய்கிறார்கள். முதன்முறையாக 7.5 ஏக்கரில் பயிர் செய்து 500 கிலோ மகசூல் பெற்றுள்ளேன். இந்த ஆண்டு, 15-20 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என, விவசாயி ஒருவர் கூறினார்.

    ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன. அந்த பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×