என் மலர்
இந்தியா
புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று அசிங்கம் செய்த DSP - தீயாக பரவும் வீடியோ
- கழிவறைக்கு அருகில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் நடந்துள்ளார்.
- உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாவகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராமச்சந்திரப்பா இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளார்.
புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை அலுவலக கழிவறைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் வற்புறுத்தி நடந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த நபர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டமான துமகுருவில் நடந்த இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கொடுமைகளை புரிவதை பலர் கண்டித்துள்ளனர்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானர். இந்த சம்பவத்தில் ராமச்சந்திரப்பா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுகிரி போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.