என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஓணம் பண்டிகை-திருவிழாக்கள் வருவதால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும்- இரு பிரதான கட்சிகள் வலியுறுத்தல்
- காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.
புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்