என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
Byமாலை மலர்13 Nov 2024 4:56 PM IST
- பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.43 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அந்நாட்டின் பல்வேறு பள்ளத்தாக்கு பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×