search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை தேர்தல்:  நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் ஆணையர்
    X

    மக்களவை தேர்தல்: நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் ஆணையர்

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி ஏழு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் எண்ணுவதற்கு முன் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்தது. அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முதலில் வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.


    இதைத் தொடர்ந்து பேசிய அவர், "நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர்."

    "இந்த தேர்தலில் மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர். இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும். வாக்குப்பதிவை ஒட்டி நாடுமுழுக்க 135 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் நான்கு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன."

    "தேர்தல் திருவிழா காலக்கட்டத்தில் நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். வாக்கு எண்ணிக்கை பணி மிகவும் வலுவான ஒன்று ஆகும். இது கடிகாரம் இயங்குவதை போன்றே மிக சரியாக நடைபெறும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×