என் மலர்
இந்தியா

குடும்ப விழாவில் மகன்களுடன் சேர்ந்து நடனமாடிய தந்தை
- தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில் பாரம்பரிய ஆடை அணிந்துள்ளனர்.
- பாடலுக்கு மூத்த மகன் நடனமாட, அவனை போலவே தந்தையும் அசத்தலாக நடனமாடுகிறார்.
தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து தந்தையும் அவர்களைபோலவே நடனமாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ குடும்ப விழாவின்போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதில், தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில் பாரம்பரிய ஆடை அணிந்துள்ளனர். பின்னர் ஒளிபரப்பப்படும் பாடலுக்கு மூத்த மகன் நடனமாட, அவனை போலவே தந்தையும் அசத்தலாக நடனமாடுகிறார். அப்போது இளைய மகனும் அவருடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க செய்கிறது. இந்த வீடியோவை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Next Story






