search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிஜ் பூஷன் சிங் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்.. நிரபராதி என்பதற்கு ஆதாரம் உள்ளதாக பேட்டி
    X

    பிரிஜ் பூஷன் சிங் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்.. நிரபராதி என்பதற்கு ஆதாரம் உள்ளதாக பேட்டி

    • பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.
    • இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் தொடுத்த கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் டெல்லி ரோஸ் அவன்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.




    பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இணை குற்றவாளியும் முன்னாள் WFI உதவி செயலாளருமான வினோத் தோமர் மீதும் மிரட்டல் குற்றச்சாட்டையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

    இதுகுறித்து கருது தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், இது அனைத்தும் தன் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் தான் நிரபராதி என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.




    உத்தரப் பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்த சிங் மீதான பாலியல் புகார்களை அடுத்து அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. அக்கட்சி அவரது மகன் கரண் பூஷன் சிங்கை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது.


    Next Story
    ×