என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
எர்ணாகுளம் அருகே சினிமா தயாரிப்பாளர் குடோனில் தீ விபத்து
- தீ பிடித்த குடோனில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையம் அருகே சினிமா தயாரிப்பாளர் ராஜூ கோபிக்கு சொந்தமான குடோன் உள்ளது.
இங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ பிடித்த குடோனில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கட்டிடத்தின் அருகில் இருந்த வீடுகள், ஆட்டோ மொபைல் பணிமனை மற்றும் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் தீ விபத்து காரணமாக தெற்கு மேம்பாலம் மற்றும் ஆலப்புழா வழியாக செல்லும் ரெயில் போக்கு வரத்து சுமார் 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டன.
முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே அந்த வழியாக போக்குவரத்து சீரானது. தீ பிடித்த குடோனின் பின்புறம் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததாகவும் அதில் யாரோ தீ வைத்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.