search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் பரிசு ரூ.25 கோடி:  இதுவரை 20 லட்சத்து 50 ஆயிரம் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை
    X

    முதல் பரிசு ரூ.25 கோடி: இதுவரை 20 லட்சத்து 50 ஆயிரம் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    Next Story
    ×