search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உயருகிறது விலை.. கட்டணத்தை அதிகரித்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள்
    X

    உயருகிறது விலை.. கட்டணத்தை அதிகரித்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள்

    • பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.
    • இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது

    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக விளங்கும் ஸ்விக்கி மற்றும் ஸுமட்டோ நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

    இந்த கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரில் நேற்று [ஜூலை 14] முதல் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் இந்த கட்டணம் அமலுக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.

    ஆன்லைன் பிளாட்பார்மில் இந்த டெலிவரி சர்வீஸ் பெறுவதால் அதற்கு தனி கட்டணத்தை இந்நிறுவனங்கள் கடந்த 2023 ஆண்டு அமல்படுத்தியது. டெலிவரி, ஜிஎஸ்டி போல் அல்லாது இந்த லாபம் நேரடியாக அந்நிறுவனங்களுக்கு செல்கிறது. இதற்கு முன்னரும் பல சமயங்களில் இந்த கட்டணம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கு முன் குறைந்தபடச்சமாக ரூ.5 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆகியுள்ளது. இது ரூ.7 வரை விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×