search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் பலி- அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்
    X

    இறந்து கிடந்த சிறுத்தை.

    ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் பலி- அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்

    • இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    • ஆண் மற்றும் பெண் சிறுத்தையை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், மேலவை மண்டலம், காக்கலகுண்டா அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த சிலர் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கால்வாய் ஓடையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மாவட்ட வன அலுவலர் ரவீந்திர ரெட்டி, பெனுகொண்டா வன அலுவலர் ஆனந்த், ரேஞ்சர் சீனிவாச ரெட்டி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த ஆண் மற்றும் பெண் சிறுத்தையை நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் விஷம் வைத்து சிறுத்தைகளை கொன்றார்களா அல்லது வனவிலங்குகளிடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தைகள் இறந்ததா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×