search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிர்பயா முதல் பெண் மருத்துவர் வரை.. இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது.. சசி தரூர் காட்டம்
    X

    நிர்பயா முதல் பெண் மருத்துவர் வரை.. இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது.. சசி தரூர் காட்டம்

    • அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.
    • 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது.

    கேரள திரைத்துறை பாலியல் புகார்கள், கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை, தினந்தோறும் நாடு முழுவதும் நடந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் என அனைத்தையும் முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.பி சசி தரூர் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு நாளும் நான் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீது அரங்கேறிய குற்றங்களே அதில் இருக்கிறது. அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.

    இந்த விஷயத்தை நம்மால் நிறுத்தமுடிவில்லை என்றால் இந்திய ஆண்களிடம் கண்டிப்பாக எதோ பிரச்சனை உள்ளதாகவே தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் முதலில் பெரிய அளவிலான கோபம் வெளிப்படுகிறது ஆனால் அதன்பின் அடுத்த கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது. பல வருடங்களாக எதுவும் மாறவில்லை.

    இதற்கு நிச்சயம் தீர்வு தேவை. அது அடிப்படையிலிருந்தே நடந்தாக வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கேரள திரைத்துறையில் ஹேமா ஆணையத்துக்குப் பின் வெளி வரத் தொடங்கியுள்ள பாலியல் புகார்கள் குறித்துப் பேசிய சசி தரூர், திரைத்துறையில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதில் கேரளா முன்னோடியாக இருப்பதில் எனக்குப் பெருமையே, குறைந்த பட்சம் கேரளாவிலாவது துணிந்து உண்மைகளைக் கூறத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×