search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்தார்ஜி முதல் சுவாமிஜி வரை.. எமர்ஜென்சியில் மோடியின் மாறு வேடங்கள்.. வைரல் புகைப்படங்கள்
    X

    சர்தார்ஜி முதல் சுவாமிஜி வரை.. எமர்ஜென்சியில் மோடியின் மாறு வேடங்கள்.. வைரல் புகைப்படங்கள்

    • ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டுள்ளார்
    • ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கினார் மோடி

    இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவசர நிலையை அறிவித்தார். இந்த அவசர நிலையானது 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. அவசர நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகள் செயலிழந்தது. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது நடவைடிக்கையில் இருந்து தப்பிக்க பலர் தலைமறைவாக திரிந்தனர். அந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலீசிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களில் உலவியுள்ளார். குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கிடையில் செய்திப் பாலமாக செயல்பட்ட நரேந்திர மோடி, ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

    டர்பன் அணிந்து சீக்கியராகவும், தனது இயல்புக்கு மாறான தாடி மீசையுடன் பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்து வேறொரு வேடத்திலும், காவி உடை தரித்து சாமியார் வேடத்திலும் குஜராத் முழுவதும் எமெர்ஜெசிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களையும் செய்திகளும் கொண்டுசேர்த்துள்ளார். குஜராத்தின் வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களுக்கு 'பதுக் பாய்' என்ற புனைபெயருடன் மோடி பயணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அக்காலத்திய ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கும் அளவுக்கு மோடியின் மாறுவேடங்கள் கச்சித்தமாக யாருக்கும் துளியும் சந்தேகம் வராத அளவுக்கு இருக்கும் என்று அவரது அபிமானிகள் இப்போதும்கூட சிலாகிக்கின்றனர்.

    நேற்று ஜூன் 25 ஆம் தேதி எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 50 வது ஆண்டுகள் ஆன நிலையில் மோடி அச்சமயத்தில் புனைந்திருந்த மாறுவேடங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

    இதற்கிடையில் எமெர்ஜென்சி காலம் குறித்து நேற்று மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது துன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×