search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பால் மற்றும் பால் பொருட்களில் ஏ1, ஏ2 குறிப்பிடாதீங்க.. FSSAI அதிரடி உத்தரவு..!

    • இது தொடர்பாக FSSAI சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான "FSSAI" பால் மற்றும் பால் பொருட்களில் ஏ1 மற்றும் ஏ2 வகைகளாக பிரித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்று வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்கள் தவறான வழிநடத்துவதாக தெரிகிறது என FSSAI தெரிவித்தது.

    இத்தகைய கருத்தாக்கங்கள் FSSAI-இன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006-க்கு முரணாக இருக்கிறது. இது தொடர்பாக FSSAI மேற்கொண்ட ஆய்வில் ஏ1 மற்றும் ஏ2 வேறுபாடு பாலில் உள்ள பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    எனினும், தற்போதைய FSSAI விதிமுறைகள் இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இத்தகைய வேறுபாடுகளை விளம்பரப்படுத்துவதை உணவுத்துறை வியாபாரம் செய்வோர் கைவிட வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.

    இதே போன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பால் வகைகளை ஏ1, ஏ2 என குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று FSSAI வலியுறுத்தி உள்ளது. இது குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கு நிறுவனங்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×