search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    காந்தி ஜெயந்தி: பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணி
    X

    காந்தி ஜெயந்தி: பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணி

    • இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம்.
    • வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

    புதுடெல்லி:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன்.

    இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

    மற்றொரு பதிவில், இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியாவை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வ தற்கான முக்கிய முயற்சி யாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து டெல்லியில் விக்யான் பவனில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தூய்மை இந்தியா பணியை தங்கள் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நினைவு கூரப்படும்.

    இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும். தொடர் முயற்சிகள் மூலம் இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும்.

    பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்றார்.


    காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×