என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![தேர்தலையொட்டி கிராம கோவில்களுக்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு: திருப்பி அனுப்பி மக்கள் பதிலடி தேர்தலையொட்டி கிராம கோவில்களுக்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு: திருப்பி அனுப்பி மக்கள் பதிலடி](https://media.maalaimalar.com/h-upload/2024/03/16/2024858-8.webp)
கோவிலுக்கு கொண்டு வந்த ஒலிபெருக்கிகளை திருப்பி அனுப்பிய காட்சி.
தேர்தலையொட்டி கிராம கோவில்களுக்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு: திருப்பி அனுப்பி மக்கள் பதிலடி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
- கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.
இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.