search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
    X

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை

    • சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
    • சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும்.

    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார். ஐ.ஐ.டி. பட்டதாரியான சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    ஆன்ட்ராய்டு இயங்கு தளம், கூகுள் குரோம் போன்ற பல திட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

    2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 2 முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1,800 கோடியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்கு சம்பளம் ரூ.1,869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம்.


    சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

    ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஏற்றத்தால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.

    அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும். உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலரே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் அரிதானதாகும்.

    கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10 ஆயிரத்து 215 கோடி என ஹூருன் பட்டியல் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×