என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
குஜராத்தில் குறிப்பிட்ட இடங்களில் மது அருந்த அனுமதி
- காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மதுபானம் அருந்த அனுமதி.
- நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
குஜராத் அரசு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (GIFT City) உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைத்து நபர்களும், அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களும் நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஓட்டல், ரெஸ்டாரன்ட்கள் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்துதல், சாப்பிடுதல் வசதி கொண்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெற்ற ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்கள் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யமுடியும். இங்கு உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஃப்ட் சிட்டி இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதிச்சேவை மையமாகவும் கருதப்படுகிறது. அதிக அளவில் ஆரக்கிள், சைரில், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் சிஃப்ட் சிட்டியில் அமைந்துள்ளது.