என் மலர்
இந்தியா
போதைப் பொருள் பற்றி தகவல் கூறிய 970 பேருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கிய குஜராத் அரசு
- 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
- இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான்.
இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கியுள்ளது குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்த 64 நபர்களுக்கு காவல்துறையினர் மூலம் தலா 51,202 ரூபாயும் 169 பேருக்கு உள்துறைத் துறை மூலம் தலா 6,36,86,664 ரூபாயும் 737 பேருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (NCB) குழுவின் மூலம் தலா 5,13,40,680 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்குகளில் அலுவலக பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபருக்கு ஒரு பறிமுதலுக்கு ரூ.2,500 பரிசு வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள 87,607 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2,500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.