search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேட்ரிமோனியில் ஆசை வலை.. 15 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் வாலிபர்
    X

    'மேட்ரிமோனி'யில் ஆசை வலை.. 15 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் வாலிபர்

    • தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
    • அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார்.

    திருமண வரன் தேடும் மேட்ரிமோனி தளத்தில் பெண்களுடன் நட்பு கொண்டு நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிமான்ஷு ஒரு திருமண தளம் மூலம் பெண்களிடம் தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு கொள்வார்.

    மேட்ரிமோனியில் நட்பாக பேசி பழகியபின் நேரில் சந்தித்து அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.

    மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய ஐந்து உயர் ரக தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    Next Story
    ×