search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள்: ஆய்வறிக்கை முடிவுகள்
    X

    வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள்: ஆய்வறிக்கை முடிவுகள்

    • ரகிப் ஹமீத் நாயக் எனும் ஊடகவியலாளரால் தொடங்கப்பட்டது இண்டியா ஹேட் லேப்
    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 11 சதவீத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம், "இண்டியா ஹேட் லேப்" (India Hate Lab).

    ரகிப் ஹமீத் நாயக் (Raqib Hameed Naik) எனும் ஊடகவியலாளரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்ச்சி பேச்சுக்களையும், பொய் செய்திகளையும் பொதுவெளியில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வருடம் இந்தியாவில் பதிவான வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பதிவை தற்போது வெளியிட்டிருக்கிறது.

    அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    2023ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான 668 வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

    இவற்றில் 498 (75 சதவீதம்) பொதுக்கூட்டங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டன.

    இவை மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104) மற்றும் மத்திய பிரதேசம் (65) ஆகிய மாநிலங்களில் அதிகம் நடைபெற்றுள்ளன.

    293 பேச்சுக்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடப்பட்டது.

    307 வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை.


    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 11 சதவீத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் இவற்றில் பங்கு பெற்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கி 2023 டிசம்பர் 31 வரை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் 193 நிகழ்ச்சிகள் நடந்தன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எது "வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சு" என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை (United நஷன்ஸ் Organization) வழங்கியுள்ள விளக்கத்தை மையமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக இண்டியா ஹேட் லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×