search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஞ்சி வன்முறை.. ஜார்க்கண்ட் அரசிடம் அறிக்கை கேட்ட உயர் நீதிமன்றம்
    X

    ராஞ்சி வன்முறை.. ஜார்க்கண்ட் அரசிடம் அறிக்கை கேட்ட உயர் நீதிமன்றம்

    • பங்கஜ் யாதவ் என்பவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    ராஞ்சி:

    பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு செய்தித் தொடர்பாளர்கள், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 10ம்தேதி ஜார்க்கண்டில் வன்முறை போராட்டம் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பங்கஜ் யாதவ் என்பவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வன்முறை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலை அறிக்கையை பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    ராஞ்சியின் பிரதான சாலை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் 2022ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி கும்பலாக வந்து கற்களை வீசி, கார்களை அடித்து நொறுக்கினர். கோவில்களை சேதப்படுத்தினர் என யாதவின் வழக்கறிஞர் ராஜீவ் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபடடிருந்த போலீசாரையும் அந்த கும்பல் தாக்கியது. இதனார் போலுசார் பதிலடி கொடுக்க, துப்பாக்கிச் சூடு நடத்திதாகவும் அவர் கூறினார்.

    அப்போது பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் உளவுத்துறை செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் காவல்துறையினருக்கு எதிராக கற்கள் சேகரிக்கப்பட்டு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? என்பது குறித்தும் மாநில அரசிடம் கேள்வி எழுப்பினர்.

    இதுபோன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் இதற்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×