search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐஸ் கிரீமில் மனித விரல்.. உற்பத்தியாளரின் உரிமத்தை பறித்த உணவு பாதுகாப்பு துறை
    X

    கோப்புப்படம் 

    ஐஸ் கிரீமில் மனித விரல்.. உற்பத்தியாளரின் உரிமத்தை பறித்த உணவு பாதுகாப்பு துறை

    • யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
    • ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.

    ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    மேலும் ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தனர். சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளர் பூனேவை சேர்ந்த நிறுவனம் என்றும், மத்திய அரசு உரிமம் பெற்று இயங்கி வந்ததாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

    தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×