என் மலர்
இந்தியா
வாரம் 90 மணி நேரம் வேலை செய்தேன்.. கழிவறைக்கு சென்று அழுவேன் - வாழ்க்கை சமநிலை குறித்து பெண் சி.இஓ.
- ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்
- பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்து L&T நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் பேசிய வீடியோ ஒன்று புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவர், "ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்" என்று கூறினார்.
ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியர்கள் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்," என்று கூறியது பேசு பொருளானது. இந்த வரிசையில், தற்போது L&T தலைவர் 90 மணி நேரம் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா கருத்து தெரிவித்துள்ளார். "சாய்ஸ், கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சி" என்ற தலைப்பில் எக்ஸ் இல் ஒரு நீண்ட பதிவில், ராதிகா குப்தா தனது பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அதில், இப்போது வேலை நேரம் பற்றி பேசலாம். எனது முதல் வேலையின் போது எனது தொடர்ந்து நான்கு மாதங்கள் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்தேன்.
ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்தேன். ஒரு நாள் மட்டுமே விடுமுறை (ஞாயிறு அல்ல - ஞாயிற்றுக்கிழமை கிளையன்ட் தளத்தில் இருக்க வேண்டியதால் திங்கள்கிழமை விடுமுறை கிடைத்தது). 90% நேரம், நான் பரிதாபகரமாக இருந்தேன். நான் அலுவலக கழிவறைக்குச் சென்று அழுதேன். இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடின உழைப்பு மற்றும் அதன் பலன் என்பது எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதில் இல்லை என்று தெரிவித்தார்.
Choices, Hard Work and Happiness I debated whether to write this post, because the risk of being misquoted on this issue in this clickbait world is high. But I am trying to share what is a nuanced point of view on the issue of work-life balance.1. Hard work is important and…
— Radhika Gupta (@iRadhikaGupta) January 11, 2025