என் மலர்
இந்தியா
உங்கள் மனைவி ஓடிப் போக வேண்டும் என்று இருந்தால்... வாரம் 70 மணி நேர வேலை குறித்து அதானி
- 8 மணி நேரம் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார்
- இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.
ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரபல முன்னணி சர்ச்சை தொழிலதிபர் கௌதம் அதானி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உங்கள் வேலை வாழ்க்கை சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன்.
ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை. உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை.
மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும்.
உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.
Watch: Adani Group Chairman Gautam Adani on work-life balance says, "If you enjoy what you do, then you have a work-life balance. Your work-life balance should not be imposed on me, and my work-life balance shouldn't be imposed on you. One must look that they atleast spend four… pic.twitter.com/Wu7Od0gz6p
— IANS (@ians_india) December 26, 2024