search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் `கூகுள் மேப் உதவியுடன் சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்தது
    X

    கேரளாவில் `கூகுள் மேப்' உதவியுடன் சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்தது

    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×