search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தின் கால்பங்கை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம்- உலக வங்கி
    X

    அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தின் கால்பங்கை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம்- உலக வங்கி

    • கடந்த காலங்களில் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும் எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும்.
    • மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள் போன்றவை வளர்ச்சியில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

    அடுத்த சில தாசப்தங்களில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் தனி நபர்களைக் கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம். அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால்பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகலாம் என்று உலக மேம்பாட்டு அறிக்கை 2024: நடுத்தர வருவாய் அமைப்பு என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2023-ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் 108 நாடுகள் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு நாடும் ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீட்டில், தனிநபர் வருவாயானது 1,136 அமெரிக்க டாலர் முதல் 13,845 அமெரிக்க டாலர்களைக் கொண்டிருக்கும்.

    இந்த நாடுகள் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் நாடாக உள்ளது. இங்குதான் உலக மொத்த மக்கள் தொகையில் 75 சதவீத மக்கள் வாழ்கிறார்கள். இங்கு, ஒவ்வொரு மூன்று பேரிலும் இரண்டு பேர் மிக மோசமான ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள்.

    கடந்த காலங்களில் இந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும் எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும். மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள் கணிக்க முடியாத வணிகம் போன்றவை வளர்ச்சியில் பிரச்சனைகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இன்னமும் பல நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், பழைய வரவு செலவு கணக்குகளையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முதலீடுகளை விரிவுபடுத்தும் கொள்கைகளை வகுப்பதிலும் இதே நிலை தொடர்கிறது. இது கிட்டத்தட்ட முதல் கியரில் காரை மேலும் வேகமாக இயக்க முயல்வதற்கு சமம் என்கிறது உலக வங்கி அறிக்கை.

    Next Story
    ×