search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் இந்தியாவின் மக்கள்தொகை
    X

    2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் இந்தியாவின் மக்கள்தொகை

    • இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது.
    • சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 1.45 பில்லியன், 2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 1.5 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம் ஆகும். வளர்ச்சிக்கான குடியேற்றத்தில் முன்னணி நாடுகளில் அமெரிக்கா உள்ளது.

    இந்தியா மற்றும் சீனாவை தொடர்ந்து 2100 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் (511 மில்லியன்), நைஜீரியா (477 மில்லியன்), காங்கோ ஜனநாயகக் குடியரசு (431 மில்லியன்), மற்றும் அமெரிக்கா (421 மில்லியன்) மக்கள்தொகையை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 345 மில்லியன்.

    இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட ஒன்பது மில்லியன் அதிகம். 2011-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 2054-ல் 1.692 பில்லியன் ஆகவும், 2061-ல் 1.701 பில்லியன் ஆகவும் உயரும் என்று அறிக்கை கூறுகிறது.

    சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது. இந்திய மக்கள்தொகையின் தற்போதைய சராசரி வயது 28.4 ஆண்டுகள் ஆகும், இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா 39.6 ஆண்டுகள் மற்றும் அமெரிக்கா 38.3 ஆண்டுகள் ஆகும். 2100-ல் இந்த எண்கள் முறையே 47.8 ஆண்டுகள், 60.7 ஆண்டுகள் மற்றும் 45.3 ஆண்டுகள் ஆகும்.

    Next Story
    ×