search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. தகவல்
    X

    இந்தியாவில் 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. தகவல்

    • வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியாக குறைந்திருக்கிறது.
    • 25 நாடுகள் 15 வருட காலக்கெடுவுக்குள் வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன.

    ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில், 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம் பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 2005/2006-ல் 55.1 சதவீதமாக இருந்த வறுமை 2019/2021-ல் 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வறுமையை குறைத்துள்ளது.

    2005/2006ல், இந்தியாவில் சுமார் 64.5 கோடி பேர் வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2015/2016இல் சுமார் 37 கோடியாகவும், 2019/2021இல் 23 கோடியாகவும் கணிசமாக குறைந்திருக்கிறது.

    இந்தியா உட்பட 25 நாடுகள், இந்த 15 வருட காலக்கெடுவுக்குள் உலகளாவிய வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன. இது விரைவான முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த சாதனையை எட்டி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×