search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியப் பெண்கள் உயர் பதவிக்கு வர வேண்டும்..  பாக்ஸ்கான் தலைவர் விருப்பம்
    X

    இந்தியப் பெண்கள் உயர் பதவிக்கு வர வேண்டும்.. பாக்ஸ்கான் தலைவர் விருப்பம்

    • அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர்
    • பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யும் தொழிலில் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்தியா முழுவதிலும் இந்நிறுவனத்தில் 48 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாக்ஸ்கான் நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது, இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பெண்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும், டிசைனிங் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புகளில் அவர்கள் அங்கம் வகிக்க வேண்டும் என்று நிறுவனம் விரும்புவபதாக பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் புதிதாக வேலையில் சேர்ந்த பெண்களில் 25 சாத்வீதம் பேர் திருமணமான பெண்களே ஆவர் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில் பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×