என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அமெரிக்க விசாவுக்கு 2½ ஆண்டுகள் காத்திருக்கும் இந்தியர்கள்
- சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
- இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.பி. விசா வழங்கப்படுகிறது. அதே போல் தொழிலுக்காக பி1 விசாவும், சுற்றுலாவுக்காக பி2 விசாவும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அமெரிக்காவுக்கு சென்று படிக்கவும் மாணவர்களுக்கு விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.
இந்த நிலையில் சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் விசாவுக்காக நேர்காணலுக்கு சுமார் 2½ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
சுற்றுலா மற்றும் தொழில் பிரிவில் விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் குறைவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியாவில் விசா நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்க டிராப் பாக்ஸ் விண்ணப்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தீர்ப்பு வழங்குதல், தற்காலிக பணியாளர்களை அமர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.
விசா விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு முன்பு இருந்து நிலையை எட்டி விட்டதாலும் அதை செயல்படுத்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை.
இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் கொரோனா காலத்துக்கு முந்தைய விசா செயலாக்க நிலைகளை எட்டுவோம் என்றும் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு 2022-ம் நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை வழங்கி உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்